Sample Posts
ஆரோக்கியமான சமுதாயத்தை நோக்கி www.zoneceylon.lk
உம் அதன் உட்கட்டமைப்பும்.
இலங்கைத் தமிழரின், கலை கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியமும், அறம் ஒழுக்கநெறி
முறையான-வாழ்வுமுறை என்பன சிதைக்கப்பட்ட நிலையில் பலர் வறுமைக்கோட்டிற்கு கீழும்
தள்ளப்பட்டுள்ளனர். இவற்றை சீர்திருத்தி வழிமுறைப்படுத்தி மீண்டும் ஒரு உயிர்ப்பான
ஆரோக்கியமான தமிழ் சமுதாயத்தை கட்டியெழுப்பும் தீர்மானத்துடன் நாம் உங்களை அணுகுகிறோம்.
“ஆரோக்கியமான சமுதாயத்தை நோக்கி” என்ற தோரணையில் நாம் ஆரம்பிக்கும் இந்த செயல்முறைத்
திட்டத் தொடர்களை நாம் இங்கு சுருக்கமாக சொல்கிறோம்.
வயிற்று பசியுடன் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மனிதனால் சரியான சிந்தனையுடனும் நேர்த்தியான
செயற்பாட்டுடனும் இயங்குவது மிக சிரமம். அதனால் முதலில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை
வறுமைக்கோட்டிற்கு மேல் கொண்டுவரும் திட்டங்களை அமுல் படுத்தவுள்ளோம்.
இதற்கான நிறுவன அமைப்புடன், உள்கட்டமைப்பு ஒன்றையும் அமைத்துள்ளோம்.
இது எப்படி வேலை செய்யும் என்பதை பார்த்தால். நாம் சேகரிக்கப்போகும் முழுமையான தரவுகளை
ஒழுங்கமைத்து அவற்றை திறமையாகக் கையாளும் வகையில் எமது தரவுத்தளம் இடமளிக்கும். பின்வரும்
தரவுகள், சமூக-நிலைப்பாடு, வறுமை, கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், குடிநீர், கழிவுநீர்,
பொருளாதாரம், சட்டம்/ஒழுங்கு போன்ற தரவுகளும். உட்கட்டமைப்புகளான எரிசக்தி, போக்குவரத்து,
சுகாதார-சேவை, மருத்துவ-வசதி, தொழில்நுட்பம், கலை-கலாச்சாரம், வணிகம்-வர்த்தகம்,
மதம்-பாரம்பரியம் போன்றவைகள் சேர்க்கப்பட்டு இணைக்கப்படும்.
இத் தரவுகளை அலசி ஆராய்ந்து நாம் தேவைகளுக்கேற்ப நேர்த்தியான அபிவிருத்தி திட்டங்களை
முன்வைப்போம். கூட்டத்தில் நிதி திரட்டும் பிரச்சாரமாக அதனை அறிமுகப்படுத்தி. திரட்டப்படும்
நிதியை நம்பகமான மற்றும் வெளிப்படையான முறையில் தெரிவுபடுத்தி, அபிவிருத்தி திட்டங்களை
பங்களிப்பவர்களின் திருப்திக்கும் மனநிறைவிற்கும் ஏற்றவாறு செவ்வனே செய்து முடிப்போம்.
ஓரளவுக்கு வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் மேலேவரத் தொடங்குகையில், நாம் அடுத்தகட்ட
பொருளாதார வளர்ச்சிக்குரிய வேலைத்திட்டங்களை முன்வைக்க தொடங்குவோம். நாம் முதலில் குடிசைக்
கைத்தொழில், அதை தொடர்ந்து, மைக்ரோ இண்டஸ்ட்ரி எனும் பாதையில் போக முனைவோம்.
குடிசைத் தொழில் என்பது ஒரு சிறிய உற்பத்தி வணிகமாகும், இது ஒரு தனிநபர் அல்லது
குடும்பத்தால் சொந்தமானது மற்றும் இயக்கப்படுகிறது.
மைக்ரோ இண்டஸ்ட்ரி, மைக்ரோ பிசினஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது சிலருக்கு வேலை செய்யும்
சிறு வணிகத்தைக் குறிக்கிறது. ஒரு மைக்ரோ என்டர்பிரைஸ் பொதுவாக 10க்கும் குறைவான நபர்களுடன்
இயங்குகிறது
இப்படியாக நாம் அடுத்த கட்டத்தை அணுகும் போது அதட்கேட்ப சிந்தித்து செயற்படுத்திக்
கொள்ளலாம். எமது முக்கியமான நோக்கம் தமிழ் சமுதாயத்தை பொருளாதார வளர்ச்சியில் மேற்படுத்தி,
ஒரு தன்னிறைவான சமுதாயமாக மாற்றியமைப்பதே. எம்முடன் சேர்ந்து ஆரோக்கியமான சமுதாயத்தை நோக்கி
பயணிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
2023 இனிய நல்லாண்டாக மிளிரட்டும்.
நன்றி வணக்கம்!
www.zoneceylon.lk
இணைந்திடுவோம் நண்பர்களே! • ஆரோக்கியமான சிந்தனையுடன் • ஆரோக்கியமான செயல்பாடுகளுடன் • ஆரோக்கியமான உறவுமுறையின் அடிப்படையில் நாம் செயற்ப்படுவோமானால் நமக்கு விடிவுகாலம் விரைவில். இணைந்திடுவோம் நண்பர்களே! ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிடுவோம். www.zoneceylon.lk
ஆரோக்கியமான சமுதாயம் மிகவும் பெருமையுடன் வழங்கும் "தொடுவானம்" இசை- தருமராஜா துவாரகன் பாடல் வரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு- சுந்தரராஜன் டினுஷா காயத்திரி குரல் *அப்ரா லதீப் *சிவதாசன் சினேகா *அறிமுக பாடகர்-ஜோசப் பெனடிக்ட் அன்டனி ஜெரிசன் ஒலிக்கலவை- டிலான் பெரேரா(Next Generation Music Studio) தயாரிப்பு-ஆரோக்கியமான சமுதாயம்( Healthier Society) ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு- லக்ஷ்மனன் கபிலேஷ் ( Cinevilla photography) Healthier Society Proudly Presents "THODUVANAM" Music - T.Thuvarakan Lyrics & Co-ordination - Sunthararajan Dinusha gayathri Vocal *Afra Lateeif *Sivathasan sineka *Debut Singer-Joseph Benadict Anthony jerison Mixing and Mastering - Dilan Perera (Next Generation Music Studio) Produced by - Healthier Society ( ஆரோக்கியமான சமுதாயம்) Cinematography & Editing Luxman kabilesh (Cinevilla photography) www.zoneceylon.lk
அன்புடன் எமது உறவுகளே எம்மை சுற்றவர உள்ள இயற்கை வளங்களை பயன் படுத்தி. • பசியை தீர்ப்போம் • அறிவை வளர்ப்போம் • அபிவிருத்தியை பேணுவோம் • பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்போம் • நம்பிக்கையை நிலைநிறுத்துவோம் • நிம்மதியாக திருப்தியுடன் மகிழ்ச்சியாக வாழ்வோம் ஆரோக்கியமான சமுதாயம் உறுப்பினர்கள். www.zoneceylon.lk
எமது சமுதாயத்தை வறுமை கோட்டுக்கு மேலும், தொடர்ந்து முன்னேறும் முயற்சி "ஆரோக்கியமான சமுதாயத்தை நோக்கி"
A motivation story about a woman entrepreneur who returns to Sri Lanka from an Indian refugee camp. Saho Creations
About Deniyaya healthier society
Deniyaya office in matara
Deniyaya charity project