Loading

healthier society

இளம் சந்ததியினரே!

தன்னம்பிக்கை (Self-Confidence), மனஉறுதி ( Determination), தன்முனைப்பாற்றல் Self-Motivation), ஊக்கத்தோடு கூடிய ஆர்வம் ( Enthusiasm), மனத் திண்மை ( WillPower) ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு விடாமுயற்சியுடன் (Perseverance) எவற்றையும் முன்னெடுத்தால் நாம் வாழ்க்கையில் ஒரு இலக்கையடைய முடியும். - முகுந்தன் அண்ணா.

தன்னம்பிக்கையைப்பற்றி Self-Confidence) முதலில் பார்ப்போம், தன்னம்பிக்கையிருந்தால் மற்றவைகளெல்லாம் தானாகவே வந்துசேரும்.

எமக்கேயென்று தனித்திருக்கும் சக்தியையும், எம்மீது செல்வாக்கு செலுத்தும் அல்லது எம்மை தாக்கும் சக்திகளையும் பற்றிய அறிவு எங்களுக்கு தேவை. அத்துடன் இந்த இரண்டுவிதமான சக்திகளையும் எப்படி சாதுரியமாக கட்டுப்படுத்திக் கொள்கிறோம் என்பதிலும், இந்த சக்திகளை சாதகமாக பயன்படுத்தி நமது வாழ்க்கையையும், நம்மை சுற்றவர இருப்பவர்களின் வாழ்க்கையையும் தொடர்ச்சியான மேம்பாட்டில் கொண்டு செல்வதென்பதிலும்தான் எமது வெற்றியுள்ளது.

முதலில் நாம் எமது சக்தியையும், எம்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சக்திகளையும் பார்போமேயானால்.

பிரபஞ்சத்தில் கிரகங்களும், அந்த கிரகங்களில் வாழும் உயிரினங்களும் தொடர்ச்சியான வாழ்க்கை வட்டத்தில் ( Life Cycle) மீண்டும் மீண்டும் சுற்றி வந்து கொண்டிருக்கும். விஞ்ஞான விளக்கத்தின்படி ஒரு சக்தி மறைய அது வேறொரு சக்தியாக உருவெடுக்கும், மொத்த சக்திகளின் சமநிலை எப்போதுமே மாறுவதில்லை.

வானவியல், ஜோதிடவியல், கணிதபுள்ளியியல் சாஸ்திரங்கள் கிரகங்களையும் அதன் சக்திகளையும், அவை மானிட வாழ்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் குறிப்பவையாக உள்ளன. இவை எவ்வளவு தூரம் உண்மை பொய் என்கிற தர்க்கத்திற்கு நாம் போகப்போவதில்லை, ஆனால் இந்த சாஸ்திரங்கள் யாரால்? எப்படி? எவ்வளவு விஞ்ஞான மற்றும் கணித அறிவுடன் கணிக்கப்பட்டது என்பதிலும், சாஸ்திரங்களை வாசிப்பவர்களுக்கு இருக்கும் விஞ்ஞான, கணித அறிவிலும்தான் அதன் தவறற்ற முழுநிறைவோ, பூரணத்துவமோ (perfection) தங்கியுள்ளது எனலாம்.

பிரபஞ்சத்தில் அங்கமாகவுள்ள எம்மொவ்வொருவருக்கும் கூட சக்தியுள்ளது, இப்படி எமக்கு சக்தியிருப்பதோ அல்லது அந்த சக்தியை நாம் எப்படிப் பாவிக்கிறோம் என்பதோ எம்மில் பலருக்கு புரியாததொன்று.

இவற்றை நாம் கொஞ்சம் அலசிப் பார்ப்போமேயானால். எமது நாளாந்த வாழ்கையில் சில வைரமான மனம்படைதவர்களை நாம் சந்திக்கின்றோம். நாமோ அல்லது அவர்களோ ஏன் அப்படியிருக்கிறார்கள் என்பதையோ, அது இயற்கையாகவோ அல்லது அவர்கள் வாழ்கையில் ஏற்பட்ட தாக்கங்களின் விளைவுகளால் என்பதையோ கூர்ந்து பார்பதில்லை. ஆனால் அவர்கள் தமக்கு இருக்கும் சக்தியை சரியான முறையில் பாவிக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத்தெரிகிறது.

ஆனால் எம்மில் அதிகப்படியானவர்கள் மிகவும் மென்மையுள்ளம் படைதவர்களாகவும், மற்றவர்களின் செல்வாக்குக்கு ஈடு செல்பவர்களாகவும் உள்ளார்கள். இவர்களின் வாழ்கையில் மற்றவர்களின் தாக்கங்கள் அதிகமாகவிருக்கும், அத்துடன் சொந்தமாக முடிவெடுப்பது என்பது கஷ்டமாக இருக்கும்.

இலங்கைத் தமிழ் இளைஞர்களின் மனதில் சரியான ஒரு வழிகாட்டலை காண்பிப்பதற்காகவே இந்த கட்டுரையை நான் எழுதவேண்டியுள்ளது, இதனை வாசித்து கிரகிப்பதன் மூலம் உங்களை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ள முடியும், மிக முக்கியமாக சமுதாயத்தில் பிழையான தாக்கங்களை ஏற்படுத்துபவர்களை அடையாளம் கண்டு கொள்வதுடன் அவர்களை கையாளும் வழிகளையும் பழகிக்கொள்ளலாம். அத்துடன் மாத்திரம் நின்றுவிடாது உங்களை நீங்கள் Assertive Behaviour உள்ள மனிதனாக மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்..

எம்மிடையே நான்கு விதமான சுபாவமுள்ளவர்களுள்ளனர். இதை ஆராய்ந்தோமேயானால் நாம் எந்த வகையானவர்களென்பதும், நாம் எந்தவகையினராக மாறுவதற்கு முயற்சிக்கவேண்டும் என்பதும் தெளிவாகும். இவர்களை நாம் இவர்கள் தொடர்பாடும் முறையில் வைத்து இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

self cnfidence

எம்மில் அதிகப்படியானோர் Passive, Aggresive, Manipulative என்ற வகைப்பிரிவினிலேயே அடங்குபவர்களாக உள்ளனர. இவர்கள் தன்னம்பிக்கை அற்றவர் (Lack Of Self-Confident) வகையிலேயே சேர்கின்றனர்.

இது யாரின் பிழையுமல்ல, கடந்த 40 ஆண்டுகால போராட்ட சூழ்நிலையாலும், தாக்கங்களாலும், அழுத்தங்களாலும் ஏற்பட்ட நிலைமையிது.

இந்த நிலைமையிலிருந்து எமது மக்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் எமது இளம் சந்ததியினராலேயே முடியும்

மேற்குறிப்பிட்ட இயல்புகளை பற்றியும் அவற்றை எப்படி (Assertive) தன்னம்பிக்கையுள்ள, தெளிவுள்ள இயல்புகளாக மாற்ற முடியும் என்பதனையும் தொடரும் தொகுப்பினில் ஆராய்வோம்

இவற்றில் ஏதும் பிழைகளிருப்பின் அறியத்தந்தால் நான் திருத்திக்கொள்வேன் - உங்களுடன் இணைந்துதான் இவற்றை நாம் சாதிக்க முடியும்

அன்புடன் முகுந்தன் அண்ணா

 

([email protected] / uk 07766408004 / facebook: Valvai Valvettithurai)

Raj Mukuntharaj Healthier Society