எனது வாழ்க்கையின் ஒரு பக்கம் நல்ல உதாரணமாக இருக்கும் - முகுந்தன் அண்ணா
நான் வேதப்பள்ளிக்கூடம் / மகளிர் பாடசாலையில் 1 தொடக்கம் 5 வரை, 1ம் அல்லது 2ம் பிள்ளையாகவே வருவேன், Sports இல் கூட ஓட்டத்தில் முதலாவதாகவே வருவேன். ஒருநாள் மாவட்டரீதில் நடந்த போட்டியில் நான் ஓடிய விதத்தை பார்த்துவிட்டு Hartley College இலுள்ள ராஜரத்தினம் மாஸ்டர் எங்கள் வீடு தேடி வந்து உங்கள் மகனை Hartley College இற்கு அனுப்புங்கோ அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று தந்தையாரை கேட்க, அவர்களும் என்னை Hartley College, Entrance Test எடுக்கவிட்டார்கள், அதில் நான் 200 பேருக்குமேல் test எடுத்தவர்களில் 9 ஆவது ஆகத் தெரிவுசெய்யப்பட்டேன்.
Hartley College இல் Football Captain ஆகவும் Atheletic இல் ஒவ்வொருவருடமும் Champion ஆகவும் வருவேன். அகில இலங்கை போட்டியில் கூட 3 தடவை பங்குபற்றினேன், இப்படியே எனது வாழ்கை Sports இலேயே குறியாகிவிட்டது, படிப்பை கைவிட்டுவிட்டேன். (சில வருடங்களின் பின் ஒரு நாள் Hartley College Principle அம்மாவை AirPort இல் கண்டபோது முகுந்தராஜ் இன் ஒரு Sprint Record 100m/ 200m இன்னும் ஒருத்தரும் break பண்ணவில்லை, எத்தனையோ வருடங்களாக அப்படியே இருக்கிறது என்று சொன்னவராம்.)
- 1ஆம் தடவை A/L இல் ஒரு S உம் (Biology க்கு),
- 2ஆம் தடவை Science Centre Tuition மற்றும் யாழ்ப்பாணத்தில் BOND Tutory இன்னும் எத்தனையோ டியூஷன் கள் நானும் எனது சிநேகிதர்களும் ஓட்டித்திரிந்தோம், மூச்சுவிட நேரமேயில்லை, மனதிலோ நாம் கஷ்ட்டப்படுகிறோம் என்று ஏகப்பட்ட திருப்தி, அம்மாவோ சமைத்து சமைதுப்போடுவா. ஆனால் சோதனை எழுதும் போதுதான் இடித்தது, சிந்திக்கவரவேயில்லை result உம் வந்தது திரும்பவும் A/L இல் ஒரு S தான் (Biology க்கு) எடுத்தேன். முதலாம் தடவைக்கும் இரண்டாம் தடவைக்கும் எந்தவித மாற்றமும் இல்லை.
அம்மாவோ தந்தையாரிடம் முறையிட்டா, தந்தையாரோ சரி உனக்கு இங்கு (வல்வெட்டித்துறையில்) படிக்கிற சூழ்நிலையில்லை, என்னுடன் திருகோணமலைக்கு வா என்றார். எனது தகப்பனார் ஒரு கமக்காரன் எமக்கு பரம்பரை வயல் காணிகள் நிறைய திருகோணமலை பக்கம் இருந்தது, அங்கே வந்திருந்து படி உனக்கு அமைதியான சூழ்நிலை இருக்கும் என்று சொன்னார்.
சரியென்று எல்லா பாடத்தின் notes ஐயும் கட்டிக்கொண்டு ஊரைவிட்டுப் புறப்பட்டேன். ஊரையும் சிநேகிதர்களையும் விட்டுச்செல்ல மிகவும் கஷ்ட்டமாக இருந்தது. ஆற்றங்கரையோரம் அமைதியான சூழ்நிலை, மனதைக்கவ்வியெழும் நெல்லுமணிகள் மீது வீசிவரும் மெல்லிய காற்று, இப்படியே எந்த இடையூறுமில்லாமல், test இற்கு 7 மாதங்களே இருந்தது. மனம் படிப்பிலேயே இருந்தது. கடைசி 4 வருடமாக Hartley College, Science Centre, Bond Tutory என்று சேர்த்வைத்த notes எல்லாம் இந்த வயல்வெளியில், யாருடைய உதவியின்றி மண்டைக்குள் செவ்வனே ஏறத்தொடங்கியது. படித்தவையெல்லாமே விளங்கியது, pass papers உம் நம்பிக்கையாக (confident ஆக) செய்தேன்.
A/L 3ஆம் முறை டெஸ்ட் உம் வந்தது, சோதனை மண்டபத்தில் முதல் முறை ஞானம் பிறந்தது போலிருந்தது, கேள்விகளெல்லாம் புரிந்தது, சந்தோசத்துடன் எழுதினேன்.
Result வரும்போது ஆவலுடன் போனேன், Physics - B, Chemistry-C, Biology-S, Botany-S கிடைத்தது.
அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தலை கால் புரியாத சந்தோசம். எனக்கும் சந்தோசம்தான் முதல்தடவை எல்லா பாடமும் pass பண்ணிவிட்டேன் என்று, ஆனால் university கிடைக்குமா என்கிற சந்தேகம்.
ஆனால் சூழ்நிலையின் தாக்கத்தில் எவ்வளவு வித்தியாசம்
- 1ஆம் முறை Hartley யில் 1S,
- 2ஆம் முறை Hartley + tutories இல் 1S,
- 3ஆம் முறை வயல்வெளியில் B, C, S, S.
தந்தையாரோ கவலைப்படாதே உன்னால் முடியுமென்று நீ (prove பண்ணி) மெய்ப்பித்து விட்டாய், அதுகாணும், எப்படியாவது Private Medical College, Colombo. இற்கு போடுவோம் இடம் கிடைத்தால் 5 வருடங்கள் நான் கஷ்டப்பட்டு உழைத்துதருகிறேன் நீ படி, படித்து Doctor ஆக வா. ஆனால் Colombo - Private Medical College எனக்கு கிடைக்கவில்லை பரவாயில்லை, என் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையில் திடம் வந்துவிட்டது.
அத்துடன் எனது அம்மாவும் அப்பாவும் சொன்ன வார்த்தை என்றுமே என்னால் மறக்கமுடியாது "இந்த 7 மாதத்தில் நீ மனதை ஒருமுகப்படுத்தி (concentrate பண்ணி) B, C, 2S எடுத்திருக்கிறாய், இதே கவனத்தை (concentrationஐ) Hartley யில் படித்த 2 வருடங்களுக்கு செலுத்தியிருந்தால் நீ 4A யும் 400 marks உடன் எடுத்திருப்பாய்" என்றார்கள். அன்றிலிருந்து நான் எதுவும் செய்வேன் என்று தெரிந்துவிட்டது.
சில நாட்கள் சென்றன, நான் ஒருநாள் வல்வெட்டித்துறை சந்தியால் போகும்போது, யாரோ என்னை முகுந்தராஜ் முகுந்தராஜ் என்று கூப்பிட்டார்கள், ஊரில் எல்லோரும் முகுந்தன் என்றுதான் கூப்பிடுவார்கள், குரல் மாத்திரம் அன்புடனும் ஆசையுடனும் கடவுள் கூப்பிட்டமாதிரியிருந்தது, திரும்பி பார்த்தால் Hartley College ராஜரத்தினம் மாஸ்டர், சிலநேரம் அளவளாவிய பின்பு, மாஸ்டர் சொன்னார் நீ Engineer ஆக வருவாய் கவலைப்படாதே என்று, எனக்கோ ஆச்சரியமாக இருந்தது, மாஸ்டர் நான் Bio எல்லவோ படித்தனான் நீங்கள் என்னை Engineer ஆக வருவாய் என்கிறீர்கள் என்றேன், அதற்கு அவர் முகுந்தராஜ் எனக்கு உன்னையும் முழுமையாக தெரியும், உன்னில் ஓடுகிற இரத்தத்தையும் நான் அறிவேன், உனது ஊர் மண் வாசனையும் எனக்கு அத்துப்படி, நம்பிக்கையாக போய்வா என்றார் , கடவுள் மாதிரி சொல்லி விட்டு பருத்தித்துறை பஸ் ஏறிவிட்டார்.
போராட்ட சூழ்நிலைகள் வெளிப்படையாகத் தெரிய தொடங்கிவிட்டன, தந்தையாரும் இங்கு நிலைமை சரியில்லை வெளிக்கிடு என்று வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டார்.எனது தந்தையார் மிகுந்த நற்பண்புள்ள மனிதர் (Gentleman), airport இல் பிரியும் போது மனம் சஞ்சலப்பட்டது. குருவி கூட்டைவிட்டு சிறகடித்து பறந்தது விடுவது போல், சுற்றவர இருந்த (அம்மா அப்பா) ஆதரவு, அரவணைப்பு, பாதுகாப்பு எல்லாவற்றையும் விட்டு இடருடைய , ஆபத்தான , பாதுகாப்பற்ற, தனிப்பட்ட வெளிநாட்டு வாழ்க்கையை நோக்கி விமானமேறிவிட்டேன்.
காலங்கள் கடந்தன, குடும்ப பொறுப்புகள் எல்லாவறையும் செவ்வனே முடித்து, ஆசைப்படி நானும் ஒரு வல்வெட்டித்துறைப் பெண்ணை கைபிடித்தேன், முதலாவது மகனும் பிறந்து, இருவருடங்களில் இரண்டாவது பிள்ளையும் பிறக்க ஆயத்தம், மனைவியிடம் சொன்னேன் எனக்கு Engineering Degree செய்யவேண்டும் போலிருக்கிறது, மனைவியோ நீங்கள் Bio செய்தபடியால் Maths Foundation ஐ படித்துக்கொண்டு apply பண்ணுங்கோ தான் Full Support பண்ணுவேன் என்றபோது கடவுள் திரும்பவும் கதைத்த மாதிரியிருந்தது.
ஒரு மாதிரி work experiance ஐ வைத்துக்கொண்டு Engineering Degree apply பண்ணி Admission உம் கிடைத்து, முதல் நாள் class இல் போயிருக்கும் போது மனைவியின் தொலைபேசி வந்தது எங்களுடைய இரண்டாவது பிள்ளை இன்று பிறக்கும் போலிருக்கிறது, class முடிந்ததும் நேரேயே வீட்டிற்கு வாங்கோ. ஆம் எனது வாழ்க்கை சரித்திரத்தில் இன்னொரு முக்கியமான நாள், இரண்டாவது மகன் பிறந்தன்றுதான் நானும் Engineering Degree தொடங்கினேன்.
A/L இல் Maths படிக்காததால் நான் இங்கு ஒரு Famous என்று சொல்லிக்கொள்கிற மாஸ்டரிடம் போனேன், அவரின் படிப்புமுறையைப் பார்த்தபொழுது இதை நானே படிக்கலாமே என்று தோன்றியது, ஐந்தாவது கிளாஸ் சுடன் நான் வரவில்லையென்று சொல்லிவிட்டேன், எனது சொந்த முயற்சியில் Maths படிப்பது கூட இலகுவாக இருந்தது.
மனைவியும் தானே எல்லாவேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தா, பிள்ளைகளுடனும் நன்றாகவே விளையாடுவேன், அதன் பிறகு கூட அப்பா எப்ப படித்து முடித்து Study Room ஐ விட்டு வெளியே வருவார் என்று கதவுக்கு வெளியாலே இருவரும் குந்தியிருப்பார்கள். இடைக்கிடை அப்பா நீங்க படிச்சிட்டீங்களா, நாங்க விளையாடுவமா என்ற கேள்வி வந்துகொண்டே இருக்கும்.
எனக்கும் வேலையும், படிப்பும், பிள்ளைகளும் என்று மூன்று வருடங்கள் ஓடிவிட்டன, Final Year இல் நல்லாகவே செய்தேன், மிக உயர்த்தியான ரிசல்ட் டும் கிடைத்தது, 1st Class Hons Degree. ரிசல்ட் வந்து அடுத்த நாளே Research Centre இல் (ஆராய்ச்சி மையத்தில்) வேலை கிடைத்தது. Engineering Degree Certificate வேண்டும் போது ராஜரத்தினம் மாஸ்டர் வல்வெட்டித்துறை சந்தியில் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
நான் பெற்ற இன்பம் என் மனைவியும் பெறவேண்டும் என்ற நோக்குடன், எனது மனைவிக்கு சொன்னேன் நீங்கள் Degree செய்வதானால், நான் பிள்ளைகளை பார்த்து, வீட்டு அலுவல்களை பார்த்து உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன் என்று.
அவவும் துணிவுடன் ஓம் என்று நாலுவருடங்கள் கொண்ட Mathematics with Business Degree தொடங்கினா. அவ கூட ஊரில் Bio தான் செய்தவ, இரண்டு பிள்ளைகள், பார்ட் டைம் வேலை, ஒவ்வொரு நாளும் 30 + 30 = 60 மைல் கார் ஓட்டம், இப்படியே நாலு வருடங்களின் பின் செவ்வனே Mathematics with Business Degreeயை முடித்துக்கொண்டா. ஒரு பெண்ணால் இவ்வளவு செய்ய முடியுமா என்று எனக்கு ஒரே வியப்பு, ஆம் ஒரு வல்வெட்டித்துறை பெண்ணால் எதுவும் முடியும் என்பதை அவ நிரூபித்துக்கொண்டா.
இப்போது எமது பிள்ளைகளின் படிப்பில் முழு கவனத்தையும் இருவரும் செலுத்துகிறோம்.
வல்வையிலிருக்கும் நீங்கள் கூட நாம் பெறாத பிள்ளைகள் தான்.
உங்களின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்றே, நானும் எனது நண்பன் பொன்.சிவகுமாரனும் வல்வை.கொம் தொடங்கினோம்.
எனது வாழ்க்கை வரலாற்றில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள்:
- படிப்பதற்கு Tuition தேவையில்லை, இடையூறு பண்ணாத சூழ்நிலையே தேவை
- உங்கள் மீது நீங்கள் முழுமையான நம்பிக்கை வைக்கவேண்டும்
- படிப்பதற்கு தேவைனான informations, notes எல்லாம் பாடசாலை மூலமோ, வேறு யாராவது மூலமோ எடுத்து வைத்துக்கொண்டு படியுங்கள்
- பாடசாலை ஆசிரியர்களிடம் உரிமையோடு கேளுங்கள் எமக்கு விளங்கத்தக்கதாக இயலுமானவரை சொல்லித்தாருங்கள் என்று
- வல்வெட்டித்துறை ஒரு குடும்பம், எங்களிடையே ஓடும் இரத்தம்தான் உங்களிடமும் ஓடும். அதனால் எமது மூதாதையர்களையும் அவர்கள் செய்த அதீத செயல்களையும் ஞாபகத்தில் வைத்து உங்களாலும் சாதிக்க முடியும் என்று உறுதி செய்யுங்கள்.
- நாளைய சமுதாயத்தின் தலைவர்கள் நீங்கள் தான் என்பதை அனுசரித்துக்கொண்டு முடிவுகளை நீங்களே எடுக்க பழகுங்கள். உங்களுக்காக மற்றவர்களை முடிவெடுக்க அனுமதிக்காதீர்கள்
- பலவிதமான போர்வையை போர்த்துக்கொண்டு, தமது சொந்த நோக்கத்திற்காக உங்கள் வாழ்கையில் விளையாடுபவர்களை அடையாளம் கண்டு ஒதுங்கிக்கொளுங்கள்
- பாடசாலையால் வந்தபின் வீட்டில் படிக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி தரச்சொல்லி உங்கள் பெற்றோரிடமும் குடும்ப அங்கத்தினரிடமும் கேளுங்கள் (உதாரணமாக வீட்டில் சண்டை சச்சரவு இருக்ககூடாது, படிக்கிற நேரங்களில் Television போடக்கூடாது)
- கல்வியே கண்ணாயிருந்து University போகவேண்டும் என்கிற நோக்கமே மேலோங்கி இருக்கவேண்டும்
- நீங்களாக நினைத்தால் எந்த பாடமும் படிக்கலாம் Mathsஓ Scienceஓ Artsஓ என்கிற பாட வேறுபாடில்லை , எதிலும் சித்தியடையலாம்
மறுபடி சந்திக்கும் வரை முகுந்தன் அண்ணாவும் வல்வை.கொம் உம்
அடுத்து வரப்போகும் தொடர்கள்.
- Enhanced-Education Network - மேம்படுத்தி முனைப்பாக்கப்பட்ட கல்வி வலையமைப்பு
- Education through Mentoring - நம்பிக்கைக்குரிய வழிகாட்டல் மூலமாக கல்வி கற்றல்
Valvai Enhanced Educational Network Approach (VEENA)